“மகளிருக்கு மட்டும் இலவசம்.. எங்களுக்கு இல்லையா?” அரசுப் பேருந்தில் இளைஞர் அலப்பறை! - drunk man arguing with conductor - DRUNK MAN ARGUING WITH CONDUCTOR
🎬 Watch Now: Feature Video
Published : Aug 18, 2024, 8:04 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து கட்டணமில்லா அரசுப் பேருந்தில் (எண் 12) நடத்துநர் கௌதமன் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து ஏனாதவாடி கிராமத்திற்குச் சென்ற கட்டணமில்லா அரசுப் பேருந்தில் பயணம் செய்த செங்கட்டான்குண்டில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சுனில் குமார் என்பவர், பயணச் சீட்டு வாங்க மறுத்து மகளிருக்கு மட்டும் இலவசம் எங்களுக்கு இல்லையா? என போதையில் தகாத வார்த்தையில் பேசி நடத்துநருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பேருந்தில் இருந்த முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட இளைஞரிடம் சமரசம் செய்ய முற்பட்ட போது, அவரையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இதனால் நடத்துநர் கௌதமன் அரசுப் பேருந்தை பாதி வழியில் நிறுத்தி விட்டு, மோரணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையிலிருந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.