thumbnail

அழகப்பபுரம் தசரா திருவிழா..150 அடி உயரம் காமராஜர் கட்டவுட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

தூத்துக்குடி: தசரா திருவிழா, கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு அவதாரக்கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.

அந்த வகையில், சாத்தான்குளம் அருகே உள்ள அழகப்பபுரத்தில் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கிராமத்தில் டாப் ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் என்ற இரண்டு தசரா குழுக்கள் உள்ளது. இவர்களில், டாப் ஸ்டார் தசரா குழு சார்பாக, தசரா திருவிழாவில் அழகப்பபுரம் நுழைவு வாயிலில் கல்வியை வலியுறுத்தும் வகையில் 150 அடி உயரமுள்ள காமராஜர் உருவம் பதித்த கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவிழாவை காண வந்தவர்கள் காமராஜரின் கட்டவுடை புகைப்படம் எடுத்து சென்றனர். அதேபோல் மற்றொரு தசரா குழுவான 7 ஸ்டார் தசரா குழுவின் சார்பாக, சின்னத்திரை பிரபல நடிகை மைனா கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இந்த குழுவின் சார்பாக மிக உயரமான காளி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.