ஹைதராபாத்: உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அதன் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon facelift) மாடலை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் இந்த ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் சிஎன்ஜி (Nexon CNG) மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியா மொபிலிட்டி ஷோவில் (India Mobility Show) டாடா மோட்டார்ஸ் அதன் நெக்ஸான் சிஎன்ஜி மாடலை காட்சிப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, புதிய டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி மாடல் பற்றிய தகவல்கள் சமீபத்தில் அதிகம் வெளிவருகிறது. அந்தவகையில், இந்தியா மொபிலிட்டி ஷோவில் டாடா மோட்டர்ஸ் காட்சிப்படுத்திய டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இருந்தது. ஆனால், தற்போது இந்த காம்பாக்ட் எஸ்யூவியின் சிஎன்ஜி பதிப்பை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் டிசைன்: தோற்றம் மற்றும் அம்சங்களை பொறுத்தவரையில், புதிய டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி (Tata Nexon iCNG) மாடலின் எக்ஸ்டீரியர், இன்டீரியர் மற்றும் உபகரணங்கள் பட்டியல் அதன் நிலையான SUV போலவே இருக்கும் என்றும், இருப்பினும் சிஎன்ஜி சிலிண்டரின் எடையைத் தாங்கும் வகையில் அதன் சஸ்பென்ஷன் அமைப்பில் கண்டிப்பாக சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
டர்போ என்ஜின்: டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி-ன் என்ஜின் அதன் பெட்ரோல் வேரியன் என்ஜின் போலவே 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3 சிலிண்டர் சிஎன்ஜினுடன் வரும், இது டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜினுடன்கூடிய இந்தியாவின் முதல் சிஎன்ஜி வாகனமாகும். மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதலாக அமைக்கப்படுவதால், நெக்ஸான் Tigor மற்றும் Tiago க்குப் பிறகு சிஎன்ஜி-ஆட்டோமேட்டிக் கலவையை வழங்கும் மூன்றாவது டாடா தயாரிப்பு என்ற பெயரையும் இந்த டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி பெற்றுள்ளது.
மாருதி சுஸுகியுடன் நேரடி போட்டி: சிஎன்ஜி, பெட்ரோல், டீசல் மற்றும் எலட்ரிக் உள்ளிட்ட பல்வேறு பவர்டிரெய்ன் வேரியண்ட்களை கொண்ட இந்தியாவில் உள்ள சில மாடல்களில் டாடா நெக்ஸனும் ஒன்றாக இருக்கப் போகிறது. டாடா நெக்ஸான் சிஎன்ஜி, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜிக்கு நேரடி போட்டியை கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மஹிந்திரா தார் ராக்ஸ் Vs தார் ஒப்பீடு.. என்ஜின், விலை பற்றிய முழு விவரம்..!