ETV Bharat / state

ஆசை பைக்கை எடுத்துச் சென்ற வங்கி ஊழியர்கள்.. கதறி அழுத இளைஞர்.. முடிவு என்ன? - vehicle seized - VEHICLE SEIZED

Bike Seized: இரண்டு மாதம் தவணை செலுத்தவில்லை எனக் கூறி இருசக்கர வாகனத்தை வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்ற நிலையில், 18 வயது இளைஞர் வங்கி முன்பு கதறி அழுது தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

பைக்கை ஜப்தி செய்ததால் கதறி அழுத இளைஞர்
பைக்கை ஜப்தி செய்ததால் கதறி அழுத இளைஞர் (Credits: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 10:21 PM IST

ஈரோடு: ஈரோடு அருகே மோளகவுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் - தீபா தம்பதி. இவர்களது மகன் தரணிதரன் (18). இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீரப்பன்சத்திரத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஐந்தாயிரம் ரூபாய் முன்பணமாகச் செலுத்தி, தனியார் வங்கி கடனுதவி மூலம் 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள (DIO SCOOTER) இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

தவனையில் இருசக்கர வாகனம் வாங்கிய குடும்பத்தினரின் பேட்டி (Credits: ETV Bharat Tamilnadu)

இதனைத் தொடர்ந்து, 3,800 ரூபாய் மாத தவணை என மூன்று வருடம் என்ற அடிப்படையில் முதல் மாத தவணையைச் செலுத்தியுள்ளார். இந்நிலையில், மகன் தரணிதரனின் உடல் நலம் பாதிப்புச் செலவின் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கான தவணை தொகையை கட்ட முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, இரண்டு மாதங்களாக தவணை கட்டவில்லை எனக் கூறி, வங்கி ஊழியர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, ஒரு மாத தவணை தொகையைச் செலுத்த மகன் தரணிதரன் மற்றும் தாய் தீபா சென்ற நிலையில், வங்கி ஊழியர்கள் வாகனத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மகன் தரணிதரன் வங்கி முன்பு வாகனத்தை தரக்கோரி கண்ணீர் விட்டு கதறி அழுது தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், வங்கி ஊழியர்களிடம் மகனின் உடல்நலம் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறியும் கேட்கவில்லை எனவும், தற்போது தவணை தொகை கட்ட வந்த நிலையில் வெளியே தள்ளி விடுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், தகவல் அறிந்து வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் தவணை செலுத்த கால அவகாசம் பெற்று தந்ததுடன், வாகனத்தை திருப்பி வழங்குமாறு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: சிகிச்சையில் பெண் யானை.. பாசப் போராட்டத்தில் குட்டி யானை.. மனதை உருக வைக்கும் காட்சிகள்! - Baby Elephant With Mother

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.