ETV Bharat / state

கணவரோடு தொடர்பில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மனைவி.. திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பகீர் சம்பவம்! - Dispute over extramarital affair - DISPUTE OVER EXTRAMARITAL AFFAIR

Dispute over extramarital affair in Thiruvallur: திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் கணவனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் மீது மனைவி பெட்ரோல் ஊற்றியபோது, கடையில் இருந்த விளக்கிலிருந்து பற்றி எரிந்த தீயால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 3:53 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு பார்வதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், சுரேஷுக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுரேஷின் காய்கறி கடையை திருவமணைத்தை மீறிய உறவில் இருந்த ராஜேஸ்வரி கவனித்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பார்வதி, கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு வந்து, காய்கறி கடையில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார்.

அப்போது, கடையில் இருந்த விளக்கிலிருந்து தீ பற்றி ராஜேஸ்வரி உடல் முழுவதும் தீயில் எரிந்தது. அதனை அடுத்து, 80 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜேஸ்வரி, சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, சுரேஷ் மற்றும் அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சுரேஷின் மனைவி பார்வதி, அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றியதும், தீ பட்ட அவர் உடல் முழுவதும் தீ பற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் சுரேஷின் மனைவி பார்வதி, ராஜேஸ்வரி இருக்கும் காய்கறிக் கடைக்கு வேகமாக வருவதும், பாட்டிலில் தான் கொண்டு வந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றுவதும், பின்னர் ராஜேஸ்வரி மீது கடையில் வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்து தீ பற்றி அவர் உடல் முழுவதும் தீ பற்றி ஏரியும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தீபக் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை.. முழு பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.