ETV Bharat / state

"2026 தேர்தலுக்குள் பழனிசாமியை உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு நடந்துவிடும்" - திவாகரன் பேச்சு! - V K Divakaran - V K DIVAKARAN

V.K.Divakaran: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்யும் முன், சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக்க முன்மொழிந்தேன். ஆனால், 38 தலித் எம்எல்ஏக்களும் தனபாலை முதலமைச்சராக்க ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

திவாகரன்
திவாகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 4:18 PM IST

Updated : Aug 30, 2024, 5:35 PM IST

புதுக்கோட்டை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் பழனிசாமியை உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு நடந்துவிடும். அதிமுகவில் யாரையும் பிரிக்காமல் ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

திவாகரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டையில் இன்று (ஆக.30) ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திவாகரன் பேசியதாவது, “அதிமுகவும், பாஜகவும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வார்த்தை போரை தவிர்க்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசு மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசியலில் தனி மனித தரமற்ற விமர்சனங்கள் செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் அனைவரிடமும் சுமூகமாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு என்று சொல்வது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதனால் தான் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி போன்ற இயற்கை பேரிடருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

மத்திய அரசுடன் 24 மணி நேரமும் திமுக மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான் தமிழகத்துக்கு நிதிகள் வருவதில்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சுமூகமான முறையை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மோதல்போக்கால் பாதிக்கப்படுவது மக்கள் தான். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் தன்னைப் போன்ற கல்வியாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று தான் முன்மொழிந்தேன். அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், 35 பட்டியலின எம்எல்ஏக்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது. அவர் என்னை விட மூத்தவர். நான்கு வருட முதலமைச்சராக இருந்த அவருக்கு கட்சி ஒருங்கிணைப்பில் அக்கறை இருக்கும்.

2026 சட்டசபைத் தேர்தலில் திவாகரனை களத்தில் காண முடியாது, பின்புலமாக இருந்து செயல்படுவேன். பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று தான் முன்மொழிந்தேன். அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், அதிமுகவில் இருந்த 38 தலித் எம்எல்ஏக்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “கோர்ட் உத்தரவை அமல்படுத்தமாட்டோம் என அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்” - மதுரை அமர்வு அதிருப்தி!

Last Updated : Aug 30, 2024, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.