வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, ரங்காபுரம், அரசமரப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்களின் சார்பில் பொது இடங்களில் வைத்து விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு நடத்திய பெரிய விநாயகர் சிலைகளை இன்று நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் வேலூர் பகுதியில் உள்ள சிலைகள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து சத்துவாச்சாரியில் இந்து முன்னணியின் பொதுசெயலாளர் முருகானந்தம் தலைமையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காகிதப்பட்டறை சைதாப்பேட்டை, மெயின் பஜார், கிருபானந்தவாரியார் சாலை வழியாக அண்ணா சாலையை கடந்து கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
இதில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க 12,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் இருந்தனர். இறுதியாக சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் கோட்டத்தலைவர் மகேஷ், பாஸ்கரன் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க தாயுடன் பல கிலோமீட்டர் பயணித்த சிறுவன்! தருமபுரியில் நெகிழ்ச்சி சம்பவம்