ETV Bharat / state

"தனி வட்டாட்சியர்களுக்கு வாகனம், அலுவலக வசதி"- தலித் விடுதலை இயக்கம் அரசுக்கு வேண்டுகோள்! - facilities to Special tahsildars

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியின மேம்பாட்டிற்காக செயல்படும் தனி வட்டாட்சியர்களுக்கு வாகனம், அலுவலகம் இல்லை. தமிழக அரசு இதனை உடனடியாக செய்து தர வேண்டும் என தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா
தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா (Image Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 4:11 PM IST

மதுரை: தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக செயல்படும் தனி வட்டாட்சியர்களுக்கு சொந்த வாகனமோ, சொந்த அலுவலகமோ இல்லை. தமிழகத்தை ஆளும் சமூக நீதி அரசு இதனை உடனடியாக செய்து தர வேண்டும் என தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று மனு அளித்தனர். அதன் பிறகு 'ஈ டிவி பாரத் தமிழ்நாடு' ஊடகத்துக்கு, கருப்பையா தனி நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வதாரம், கல்வி, இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க தமிழக அரசால் மாநில, மாவட்ட அளவில் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள்தான் மேம்பாட்டிற்கான பணிகளை நடைமுறைப்படுத்தியும், கண்காணித்தும் வருகின்றனர்.

தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், மாவட்ட அளவில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலர் பொறுப்பில் அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கேற்ப வட்டங்களாக பிரிக்கப்பட்டு குறைந்தது 3 முதல் 4 ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிட நலத்துறையின் தனி வட்டாட்சியர்களுக்கு அந்த மாவட்டத்தின் 3 அல்லது 4 வட்டங்கள் வரை பணி செய்யும் பகுதியாக அரசால் ஒதுக்கப்படுகிறது. பட்டியல் இன மக்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது, வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் அவர்களின் மேம்பாடு ஆகியவற்றை கண்காணிப்பது தான் இவர்களின் முக்கிய பணியாக உள்ளது.

இதையும் படிங்க: "தமிழக அரசியலில் மூன்றெழுத்தின் அடுத்த வாரிசே" - வைரலாகும் த.வெ.க தொண்டர்களின் போஸ்டர்!

ஒவ்வொரு தனி வட்டாட்சியரும் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகளுக்கான இடங்களில் பல்வேறு தனி நபர்களால் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை கண்காணிப்பது, நீதிமன்ற விசாரணைக்கு சென்று வருவது போன்றவை இவர்களின் முக்கிய பணியாகும்.

இந்நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட வட்டங்களில் செயல்படும் ஆதிதிரவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்களுக்கு தனியாக அலுவலக வசதியில்லை. பல இடங்களில் தனியார் வாடகை கட்டிடங்களிலும், ஆதி திராவிட மாணவர் விடுதிகளிலும்தான் இவர்களின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக, ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர்கள் தங்களின் பணி தொடர்பாக கிராமங்களுக்கு சென்று வர அரசு வாகன வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் இவர்களின் பணி தொடர்பாக கிராமங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு மதுரை மாவட்டம் மற்றும் தமிழகத்தின் அனைத்து ஆதிதிராவிட நலத்துறையின் தனி வட்டாட்சியர்களுக்கும் முறையான அரசு அலுவலகங்களையும், வாகன வசதியையும் செய்து கொடுத்து கிராமப்புறங்களில் உள்ள பட்டியல் இன மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகை செய்திட வேண்டுகிறோம்.

இதனை அரசின் கொள்கை முடிவு என மதுரை மாவட்ட ஆட்சியர் வெளிப்படையாக கூறுகிறார். இதனை தமிழக அரசும் தட்டிக் கழிக்குமானால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை சமூகநீதி காக்கும் என நம்புவதற்கு இடமில்லாமல் போகும். எங்களது வேண்டுகோளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்வதற்கு தவறினால் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தலித் விடுதலை இயக்கம் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.