ETV Bharat / state

மொழிப்போர் தியாகி ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி! - அதிமுக

Language War Martyr Sarangapani: தமிழ்நாடு முழுவதும் இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த சாரங்கபாணியின் நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டன.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 6:14 PM IST

மயிலாடுதுறை: இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963 - ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று (ஜன.25) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965இல் கல்லூரி வளாகத்திலேயே தன் மீது தீ வைத்துக் கொண்டு உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (ஜன.25) மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர்வலமாக நினைவு ஸ்தூபிக்கு வந்து கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதைப்போல் அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் தியாகி சாரங்கபாணியின் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மொழிப்போர் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அதிமுகவினர் வீரவணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அமமுக மாவட்டச் செயலாளர் பாரி வள்ளல் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை தமிழ் சங்கம் தலைவர் பவுல்ராஜ் தலைமையில் தமிழ் சங்கத்தினர் மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திருக்குறள் பேரவை, தமிழர் தேசிய முன்னணி, திராவிடர் கழகம், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றனர்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.