ETV Bharat / state

சென்னை டூ கோவை; வந்தே பாரத் ரயில் சேவை மார்ச் 15 வரை நீட்டிப்பு

Chennai to Covai Vande Bharat Train: சென்னை - கோவை இடையே இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவையை, மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chennai to Coimbatore Vande Bharat Train
சென்னை டூ கோவை வந்தே பாரத் நீட்டிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 9:49 AM IST

சென்னை: கோவை - சென்னை - கோவை மார்க்கத்தில் வந்தே பாரத் ரயில், புதன் கிழமை தவிர மற்ற நாட்களின் இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. முன்னதாக, இந்த சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 27ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது சென்னை - கோவை இடைய இயக்கப்படும் வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயிலின் சேவையை பிப்ரவரி 12ஆம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று (மார்ச் 4) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, 'சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படு, மதியம் 2.15 மணிக்கு கோவை சென்றடையும் வந்தே பாரத் சிறப்பு ரயிலின் (06035) சேவை மார்ச் 5ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதே போல் மறு மார்க்கமாக கோவையில் இருந்து மாலை 3.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.50 சென்னை வரும் வந்தே பாரத் சிறப்பு ரயிலின் (06036) சேவை மார்ச் 5ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வைகை எக்ஸ்பிரஸ் உள்பட 53 ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நிறுத்தம் - தெற்கு ரயில்வே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.