சென்னை: தவெக மாநில மாநாடு கடந்த அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் மத்திய மற்றும் மாநில அரசு குறித்து பல்வேறு கருத்துக்களையும் தனது கட்சியின் நிலைபாடு குறித்து பேசி இருந்தார். இவரது கருத்து பல்வேறு தரப்பில் இருந்து விமர்ச்சிக்கப்பட்ட வந்த நிலையில் விஜய் அதிமுக குறித்து எந்த விமர்ச்சனமும் வைக்கவில்லை என்னும் கருத்து வலம் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் நேற்று பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தலைப்புச் செய்தி்யில் வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் செய்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, இந்த கூட்டணி விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், “தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களை நேற்றுத் தலைப்புச் செய்தி்யாக வெளியிட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party Updates (@TVKHQUpdates) November 18, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி…
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?.. மாவட்ட தலைவர் கொடுத்த அப்டேட்!
இந்த செய்தி ஆதாரமோ, அடிப்படையோ அல்லாத, முற்றிலும் தவறான தகவல். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான் தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர். இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என இந்த ஊடங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு தவெக 2026 தேர்தலில் வெற்றி பெறும்.
மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள். எனவே மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இந்த செய்தி குறிப்பு கழகத் தலைவர் விஜய்யின் ஒப்புதல் பெற்று தான் வெளியிடப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்