ETV Bharat / state

இன்னும் 2 மாதங்களுக்கு பாஜக தமிழகத்தில் விசிட்.. டிஆர்பி ராஜா தாக்கு! - மோடி வடை

Minister TRB Rajaa: புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழகத்தை பின்னோக்கி தள்ள வேண்டும் என்று பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 4:28 PM IST

புதுக்கோட்டை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கை குறித்த விளக்க பொதுக்கூட்டம், புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் திமுகவினர் சிலர், பிரதமர் மோடி முகமூடி அணிந்து, கலந்து கொண்ட அனைவருக்கும் பிரதமர் மோடி கையில் வடையை வைத்துக் கொண்டிருப்பது போல இருக்கும் துண்டுப் பிரசுரங்களையும், உளுந்து வடையையும் வழங்கினர்.

மேலும், இக்கூட்டத்தில் 15 லட்சம் என்ன ஆச்சு, டீசல் விலை குறைச்சாச்சா, கருப்பு பணம் மீட்டாச்சா, எய்ம்ஸ் கட்டி முடிச்சாச்சா, 2 கோடி வேலைகள் தந்தாச்சா, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாச்சா, மீனவர்களுக்கு பாதுகாப்பு தந்தாச்சா, வரும் போது எல்லாம் வடைதான் நீங்க சுடுறீங்க, சொன்னதை எப்ப செய்வீங்க என கேள்வி எழுப்பியவாறு, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வடை வழங்கினர்.

அமைச்சர் டிஆர்பி ராஜா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோரும் துண்டுப் பிரசுரத்தை கையில் ஏந்தியவாறு, கையில் வடையை பிடித்தவாறும் பிரதமர் மோடியை விமர்சித்து மேடையில் நின்றனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, “டீசல் விலையைக் குறைப்பேன் என்று பிரதமர் கூறினார். அதே போன்று, மதுரையில் எய்ம்ஸ் கட்டி தருகிறேன் என்று கூறினார்.

மேலும், இரண்டு கோடி வேலை வாய்ப்புகளைக் கொடுப்பேன் என்று கூறினார். அதுவும் கொடுக்கவில்லை. இதே போன்று, பிரதமர் வாயிலேயேதான் வடை சுட்டு வருகிறார். மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படும் என்று கூறி, பிரதமர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், அந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை. இருண்ட ஆட்சியைத்தான் பிரதமர் நடத்தி வருகிறார். இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உள்ள தமிழகத்தை பின்னோக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் இரண்டு மாதத்திற்கு அவர்கள் தமிழகத்தை விசிட் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

திமுக என்பது கட்சி கிடையாது, இது ஒரு மக்கள் இயக்கம். தமிழகம் இன்று நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். திமுக, ஆட்சியில் இருக்கிறதோ இல்லையோ, மக்களோடு மக்களாக திமுக இருக்கிறது. திமுக ஒருவருக்கான கட்சி கிடையாது, இது அனைவருக்குமான கட்சி.

இந்த திட்டத்தை இந்தியாவே வியந்து பாராட்டி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலானா முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துள்ளார். முன்னதாக அமைச்சர் முதல் தொண்டர்கள் வரை மோடி உருவப் படத்தை ஒரு கையிலும், வடையை மற்றொரு கையிலும் பிடித்து பிரதமர் வாயாலேயே வடை சுடுவதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தினர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமரை விமர்சனம் செய்து 'வடை' வழங்கி கோவை திமுகவினர் நூதன பிரசாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.