ETV Bharat / state

வால்பாறையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை.. போக்குவரத்து பாதிப்பு! - Wild Elephant Blocked The Vehicles in Valparai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 1:59 PM IST

Wild elephant Roaming in Valparai: வால்பாறை அடுத்த ஊமையாண்டி முடக்குப் பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் வாகனங்களை வழிமறித்து, வாகன ஓட்டிகளுக்கு போக்குகாட்டிய ஒற்றை காட்டு யானையின் வீடியோ சமூகவலைதலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஒற்றை காட்டு யானை
ஒற்றை காட்டு யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு இரவு நேரங்களில் அதிகமான கனரக மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் வருவது வழக்கம். இந்த நிலையில், வால்பாறை கவர்க்கல் அடுத்துள்ள ஊமையாண்டி முடக்குப் பகுதியில் நேற்று (ஜூன் 05) இரவு ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த வேன் ஒன்றை எதிரே ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளது.

இத்தகைய சூழலில், யானையைக் கண்ட வேன் ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார். மேலும், அந்த ஒற்றை காட்டு யானை சாலையில் நின்றுகொண்டு வாகனங்களை வழிமறித்து போக்குகாட்டியதால், சுமார் ஒரு மணி நேரமாக அவ்வழியே வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையே, அந்த வேன் ஓட்டுநர் சாலையில் வாகன ஓட்டிகளை வழிமறித்த அந்த ஒற்றை காட்டு யானையை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோகாட்சி தற்போது சமூகவலைதலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், ஊமையாண்டி முடக்குப் பகுதியில் சுற்றித் திரியும் அந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 2ஆம் தேதி, வால்பாறை சேக்கல் முடி புதுக்காடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் (18) என்ற கல்லூரி மானவர் தனது நண்பருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் கல்யாண பந்தல் பிரிவில் இருந்து புதுக்காடு எஸ்டேட்டிற்கு செல்லும் தனியார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டிற்குள் இருந்து வெளியே வந்த காட்டு யானை, நேருக்கு நேர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியபோது, முகேஷ் கால் தடுமாறி கீழே விழுந்த நிலையில், யானை அவரை மிதித்தது. இதில், சம்பவ இடத்திலேயே முகேஷ் உயிரிழந்தார். இதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், யானை மிதித்து கல்லூரி மானவர் உயிரிழந்துள்ள சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 300 மூட்டை அரிசி, 200 கிடா கறி.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கம கம கறி விருந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.