ETV Bharat / state

தமிழக பாடத்திட்டத்தில் படித்த விஞ்ஞானிகள் தான் இஸ்ரோவில் சாதனை - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி - Appavu has criticized RN Ravi - APPAVU HAS CRITICIZED RN RAVI

Tamil Nadu Legislative Assembly Speaker Appavu: தமிழக பாடத்திட்டத்தில் படித்து உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை தாங்க முடியாமல்தான் ஆளுநர் இப்படி பேசுகிறார் என்று தமிழக பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி
சபாநாயகர் அப்பாவு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 2:46 PM IST

திருநெல்வேலி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி நகரம் எஸ்என் ஹைரோட்டில் உள்ள வ. உ. சி. மணி மண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகரிடம், தமிழக பாடத்திட்டம் குறித்து ஆளுநர் விமர்சித்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ஆளுநர் இப்படிப்பட்ட தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என்று பலமுறை நாங்கள் கூறியிருக்கிறோம். தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பற்றி முழுமையாக ஆளுநருக்கு தெரியுமோ? தெரியாதோ? என தெரியவில்லை. அவர்கள் சந்தேக கண்ணோடு அதை பார்க்கிறார்களா? என்றும் தெரியவில்லை.

இப்போது விண்வெளியில் சந்திரயான்-3 விண்கலம் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. உலகமே வியக்கும் வகையில் சந்திரயான்-3 திட்டம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. வீரமுத்துவேல் என்பவர்தான் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக உள்ளார். அவர் தான் அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி, தமிழ் வழி கல்வி பயின்றவர், அரசுப் பள்ளியில் படித்தவர்.

அவர்தான் சந்திரயான்-3 திட்டத்தில் இயக்குநராக இருந்து இப்போது பெருமையும் சேர்த்துள்ளார். அவர் மட்டுமின்றி விண்வெளி ஆராய்ச்சி நிலைய தலைவராக ஏற்கனவே பணியாற்றிய சிவனும் தமிழர்தான். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரும் அரசுப் பள்ளியில் தமிழக பாடத்திட்டத்தை படித்துதான் மிக உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

இந்தியா பெருமைப்படுகின்ற வண்ணம் இன்று விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் என எடுத்துக் கொண்டால் சிவன் தலைவராக இருந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக இருந்துள்ளார். தற்போதைய இயக்குநர் வீரமுத்துவேலும் தமிழர்தான்.

சந்திரயான்-2 தரையிறங்கும் போது கீழே விழுந்தது. அப்போது அதில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக இந்தியா முழுவதும் 11 விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக நியமிக்கப்பட்டவர் நாராயணன். அவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்தான்.

தமிழகத்தைச் சேர்ந்த 90% விஞ்ஞானிகள் தமிழ் வழியில் பயின்றவர்கள். அவர்கள்தான் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் வழிக் கல்வியில், தமிழ்நாடு பாடத்திட்டத்தில் கல்வி பயின்றவர்கள்தான். அது ஆளுநருக்கு தெரியுமோ? தெரியாதோ?

அது போன்ற விஞ்ஞானிகளை பெருமை சேர்க்கும் வகையில் தமிழக முதல்வர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் சன்மானம் அளித்து, அவர்களுடைய பெயரில் இளம் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழக பாடத்திட்டத்தில் படித்து உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை முதல்வர் பெருமைப்படுத்தி இருக்கிறார். அதைத் தாங்க முடியாமல்தான் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்னவோ? தெரியவில்லை" என்று பதிலளித்தார்.

ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu (ஈடிவி பாரத் தமிழ்நாடு)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கட்சித் தாவினால் பென்ஷன் கட்.. எம்.எல்.ஏக்களுக்கு செக் வைத்து மசோதா.. ஹிமாச்சல் அரசு அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.