ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; ஊழல் புகாரோடு நெல்லைக்கு வந்த அரசு அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்! - JAHANGIR BASHA BRIBE ISSUE

ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய ஜஹாங்கீர் பாஷாவை, சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி கட்டடம், ஜஹாங்கீர் பாஷா
திருநெல்வேலி மாநகராட்சி கட்டடம், ஜஹாங்கீர் பாஷா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 9:47 PM IST

திருநெல்வேலி : ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தபோது, கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பணம் கட்டுகட்டாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஊட்டி நகராட்சி அலுவலகம் அழைத்து சென்று விசாரித்ததில் அந்த பணம் முறைகேடாக அவரது கையில் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற இரண்டே வாரத்தில், ஜஹாங்கீர் பாஷாவை தமிழக அரசு திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்தது.

வழக்கமாக இது போன்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டால் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்படும். ஆனால், மிக குறுகிய காலத்தில் ஜஹாங்கீர் பாஷாவுக்கு மீண்டும் பொறுப்பு கிடைத்தது எப்படி என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இதையும் படிங்க : லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர் திருநெல்வேலி உதவி கமிஷனராக நியமனம்!

குறிப்பாக, ஜஹாங்கீர் பாஷா ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். எனவே, தனக்குள்ள அரசியல் மற்றும் அரசு நிர்வாக செல்வாக்கை பயன்படுத்தி அவர் மீண்டும் பணி உத்தரவை பெற்று இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விளக்கத்துடன் செய்திகள் வெளியாகின. இதற்கிடையில் பணி நியமன உத்தரவு ஆணையுடன் மாநகராட்சி உதவி ஆணையராக பணியில் சேர ஜஹாங்கீர் பாஷா மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

இதையும் படிங்க : ஊழல் கறையோடு வந்த அதிகாரி..திருப்பி அனுப்பிய ஆணையர்; உதவி கமிஷனர் நியமனத்தின் பின்னணி என்ன?

அப்போது, மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா ஜஹாங்கீர் பாஷாவை பொறுப்பேற்க விடாமல் அதிரடியாக திருப்பி அனுப்பினார். தங்கள் மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநரிடம் ஆட்சேபனை கடிதம் வாங்கிவிட்டு பணியில் சேர வரும்படி ஆணையர் உத்தரவிட்டு திருப்பி அனுப்பினார்.

ஆட்சியரிடம் மனு: இந்நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சியில் பொறுப்பேற்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில், சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த டிச.02ஆம் தேதி மனு அளித்தனர்.

பணியிடை நீக்கம்: இதன் தொடர்ச்சியாக, தற்போது ஜஹாங்கீர் பாஷாவை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.