புதுச்சேரி: புதுச்சேரி பெரியார் நகர் கங்கையம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம் இன்று (ஏப்.23) நடைபெற்றது. ஊர்வலம் முடிந்து அபிஷேகத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அதே பகுதியைச் சேர்ந்த ருத்ரேசை (25), அவரது தாய் மற்றும் தங்கை கண் எதிரே சரமாரியாகக் குத்தியதில், ருத்ரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்த தகவல் போலீசாருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ருத்ரேஷ்க்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர், கௌதம் ஆகியோருக்கும் கஞ்சா விற்பதில் முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தப்பி ஓடிய கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் புறா குளம் அருகே வில்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உலக நன்மைக்காகவும், கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், தற்போது நிலவி வரும் வெயிலின் தாக்கம் குறையவும் வேண்டி, பக்தர்களின் முதலாம் ஆண்டு 108 பால்குடம் ஊர்வலம் லிங்காரெட்டிபாளையம் முத்து மாரியம்மன் கோயில் வளாகத்திலிருந்து துவங்கியது.
ஊர்வலமானது, மாடவீதி வழியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறா குளக்கரையைச் சுற்றி வந்து, வில்லியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - Install Automatic Doors In Buses