ETV Bharat / state

இயற்கை வேளாண்மை குறித்து A To Z அறிய வேண்டுமா? - தஞ்சையில் மாபெரும் வேளாண் திருவிழா! - Thanjavur Organic Farming Festival - THANJAVUR ORGANIC FARMING FESTIVAL

Thanjavur Organic Farming Festival: இயற்கை வேளாண் பொருட்களின் நன்மைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த "இயற்கை வேளாண் திருவிழா 2024" அமைக்கப்பட்டுள்ளது, என சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தஞ்சை இயற்கை வேளாண் திருவிழா 2024
தஞ்சை இயற்கை வேளாண் திருவிழா 2024 (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 10:55 PM IST

தஞ்சாவூர்: மனிதனின் உணவு பழக்கமானது, காலத்திற்கு ஏற்ப மாறுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய உணவு வகைகள் பெரும்பாலும் ரசாயன உரங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம் நாம் உணவுப் பொருட்களை பதப்படுத்தி உண்ணும் நிலையை விரும்பி ஏற்பதனால் எனலாம். இந்த வகை உணவுப் பொருட்கள் கெடாமல் நீண்ட நாள் இருந்தாலும், நமது ஆரோக்கியதிற்கு அதிகளவு கெடுதலை தரக்கூடியது. எனவே சமீபகாலமாக பலர் இயற்கை உணவு வகைகளுக்கு மாறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

டாக்டர் டி பாலசுப்பிரமணியன் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு, மாஸ் கல்வி குழுமம் மற்றும் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் அமைப்பும் இணைந்து கும்பகோணம் மாஸ் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆக.10) மற்றும் நாளை (ஆக.11) என இரு நாட்களுக்கு "இயற்கை வேளாண் திருவிழா 2024" நடத்தி வருகிறது. இதில் இயற்கை வேளாண் உழவர்கள் விளைவிக்கும், பொருட்களை சந்தைபடுத்தும் தளமாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி பாலசுப்பிரமணியன், "இந்த திருவிழா உழவர்களையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கும் பாலமாகவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி கும்பகோணம் மாஸ் கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமையில் தொடங்கியது.

இதில் சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் ராஜேந்திரன், கல்விக்குழு அறங்காவலர் விக்னேஷ்குமார், கல்லூரி முதல்வர் சரவணன், தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கே.எம் பாலு உள்ளிட்ட எண்ணற்ற விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த இயற்கை வேளாண் திருவிழா 2024-இல், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவ சிலை வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இளவட்டங்களை கவரும் வகையில் இளவட்ட கல் தூக்குதல், ஜல்லி கட்டு காளைகள் ஆகியவை கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி ரகங்கள், நாட்டு காய்கறி, கீரை ரகங்கள் பல காட்சிப்படுத்தி, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இளம் தலைமுறையினருக்கு, மறந்து போன நம் பாரம்பரிய விளையாட்டுக்களான பம்பரம், ஆடு புலி ஆட்டம் ஆகியவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, அதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சியானது, இளைஞர்கள் மத்தியில் இயற்கை உணவுகள் குறித்தும், அவற்றின் இன்றியமையாத நற்பலன் குறித்தும், எடுத்துரைக்கும் நிகழ்வாக இந்த திருவிழா அமைந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அணைக்காக உயிர்த்தியாகம் செய்த சிறுமியை குலதெய்வமாக வழிபடும் மக்கள்.. நல்லம்மன் கோயிலின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.