ETV Bharat / state

திருக்குறள் சொன்னா சர்பத் இலவசம்! பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் ஜூஸ் கடை! - free juice for thirukkural reciters - FREE JUICE FOR THIRUKKURAL RECITERS

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜூஸ் கடையில் பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தால் இலவசமாக சர்பத் வழங்கும் சலுகை பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சலுகை பதாகை, மாணவர்கள், ஜூஸ் கடை உரிமையாளர் சீனிவாசன்
சலுகை பதாகை, மாணவர்கள், ஜூஸ் கடை உரிமையாளர் சீனிவாசன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 9:16 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகர் பகுதியில் சீனிவாசன் (29) மற்றும் அவரது சகோதரர் சிவாஜி கணேசன் (25) ஜூஸ் கடை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் பள்ளிகள் உள்ளதால் பெரும்பாலும் மாணவர்கள் வருகை தருவது அதிகமாக உள்ளது.

இதனால் மாணவர்களை கவரும் வகையில் ஜூஸ் கடையில் தள்ளுபடி வைப்பது வழக்கம். இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், திருக்குறள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் கூறினால் ஜூஸ் வழங்கப்படுகிறது.இதில் 5 திருக்குறள் மனப்பாடமாக ஒப்பித்தால் அவர்களுக்கு சர்பத் இலவசமாகவும், 10 குறள் ஒப்புவித்தால் பால் சர்பத்தும், 20 குறள் ஒப்பித்தால் மில்க் ஷேக் வழங்கியும் வருகிறார்கள்.

ஜூஸ் கடை உரிமையாளர் சீனிவாசன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இது குறித்து பேசிய ஜூஸ் கடை உரிமையாளர் சீனிவாசன் கூறூகையில், "மாணவர்கள் பள்ளியை முடித்துவிட்டு நேரடியாக வீட்டுக்குச் சென்று செல்போன் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் தினமும் 5 திருக்குறள், 10 திருக்குறள் மனப்பாடம் செய்து வந்து கூறினால் சர்பத் கிடைக்கும் என்பதால் மாணவர்கள் நாள்தோறும் புதுப்புது திருக்குறள்களை படித்து கடையில் திருக்குறள் ஒப்பித்து ஜூஸ் குடித்து செல்கின்றனர். இது எங்களுக்கு மன திருப்தியை தருகிறது.

இதையும் படிங்க: கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை.. பேருந்து மீறி ஏறி குத்தாட்டம் போட்ட நபர்!

இது பல்வேறு மாணவர்கள் இடையே பரவி நாளுக்கு நாள் கடைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு நாளைக்கு சுமார் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சர்பத் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கு பாதி மாணவர்கள் தான், திருக்குறள் சொல்லி ஜூஸ் வாங்கி செல்கின்றனர்” என்றார்.

இவ்வாறு மாணவர்கள் மத்தியில் தமிழின் பெருமைமிகு நூலான திருக்குறள் கற்கும் பழக்கத்தை ஊக்குவித்தும் வரும் இந்த ஜூஸ் கடை நடத்தும் இளைஞர்களின் செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.