ETV Bharat / state

பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தஞ்சை இளைஞர் விபரீதம் - chennai airport bomb threat - CHENNAI AIRPORT BOMB THREAT

chennai airport crime: சென்னை விமான நிலையத்திற்கு இரண்டு வாரங்களில் வந்த ஆறு வெடிகுண்டு மிரட்டல்களில் ஒரு வெடிகுண்டு புரளி மிரட்டலில் சம்பந்தப்பட்ட தஞ்சை மாவட்டம் திருவாயூரை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைதான பிரசன்னா
கைதான பிரசன்னா (credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 7:18 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 18ஆம் தேதி காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது வெரும் புரளி என்று தெரிந்தது. ஆனாலும் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் இருந்து இந்த மிரட்டல் இமெயில் வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சைபர் கிரைம் தனிப்படையினர் தஞ்சை திருவையாறு சென்று விசாரித்தபோது அப்பகுதியை சேர்ந்த பிரசன்னா (27) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் வினோதமான உண்மைகள் தெரிய வந்தன. அதாவது, பிரசன்னா சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்ததாகவும் அப்போது எதிர் வீட்டுக்காரர் ஒருவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவரை பழி வாங்குவதற்காக அவருடைய பெயரில் போலியான ஈமெயில் ஐடி உருவாக்கி அதன் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

அவரை கைது செய்த போலீசார், மிரட்டலுக்கு பயன்படுத்திய செல்போன், இன்டர்நெட் மோடம் மற்றும் ரூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன்பின்பு பிரசன்னாவை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ச்சியாக வந்த புரளியான 6 வெடிகுண்டு மிரட்டல்களில் ஒரு வெடிகுண்டு மிரட்டலை பிரசன்னா விடுத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். ஆனால், மேலும் 5 வெடிகுண்டு மிரட்டல்களில் சம்பந்தப்படவர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளிவரவில்லை.

இதையும் படிங்க: தாய், தம்பியை கொன்று கோணி பையில் கட்டிய மகன்.. சென்னையில் இரட்டைக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.