ETV Bharat / state

"அதிமுக சீனியர்களை முந்தி பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி" - உதயநிதி பதிலடி!

தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 7:18 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எனக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்றை விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதற்கு முழு சுதந்திரமும் அவருக்கு உண்டு.

ஏற்கனவே நான் பொறுப்பேற்கும் பொழுது வந்த விமர்சனத்தை வரவேற்கிறேன் என தெரிவித்திருந்தேன். எடப்பாடி பழனிசாமி என்னை விட அரசியலில் அனுபவம் உடையவர்தான், நான் அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நான் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவினருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தபோது, யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி வந்தபோது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட அதிக சீனியர்கள் இருந்தனர். குறிப்பாக அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான் அடுத்த முதலமைச்சராக வருவார் என கூறினார்கள்.

அதேபோல், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தபோது அவர்களை மீறி எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார்? கூவத்தூரில் நடந்த கூத்து என்ன? என்பதெல்லாம் தொலைக்காட்சியில் மக்கள் பார்த்தனர்.

எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை விமர்சனம் செய்யும் முன்பு எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை நினைத்துப் பார்த்துவிட்டு மற்றவரை விமர்சனம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "திமுக தலைவர் எனக்கு கொடுத்துள்ளது பதவி கிடையாது கூடுதல் பொறுப்பு. ஆனால், அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை நான்கு ஆண்டுகள் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பதவியை பங்கு போட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: "16 பிள்ளைகளை ஏன் பெறக் கூடாது?" கேள்வி எழுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிறகு ஆட்சி முடிந்த பிறகு அவர்கள் தனித்தனியாக பிரிந்து கட்சியே சிதறி கிடக்கிறது. அதுபோன்று திமுகவில் எப்போதும் நிகழாது. எங்களுக்கு எப்போதும் ஒரே தலைவர்தான். மேலும், எனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியவுடன் சென்னையில் மழை வருவதற்கு முன்பு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து களத்திற்கு சென்று மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என அனைத்து பணிகளும் செய்தோம்.

நாங்கள் இருக்கும் அதே பகுதியில் தான் எடப்பாடி பழனிசாமியின் இல்லமும் இருக்கிறது. மழை பெய்த சமயத்தில் அவரும் வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் கிளம்பினார் என கூறியதும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்போகிறார் என எதிர்பார்த்தோம். ஆனால், விமான மூலம் சேலத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார். இதுபோன்ற நேரங்களில் மக்களுடன் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் மக்கள் மனதில் இருப்பார்கள் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.