ETV Bharat / state

தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - southern railway

Tambaram to Kochuveli Special Train: தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் கொச்சுவேலி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை ஜூலை மூன்றாம் வாரம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ரயில்
ரயில் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 5:25 PM IST

சென்னை: தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஜூன் மாதம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூலை மூன்றாம் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) ஜூலை 4 முதல் ஜூலை 20 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 01.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) ஜூலை 5 முதல் ஜூலை 21 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகத்துக்கு இடஒதுக்கீடு தான் பரிகாரம்' - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.