ETV Bharat / state

ஆக்கிரமிப்பு குளங்களை மீட்கக் கோரி நூதன முறையில் மனு அளித்த சமூக ஆர்வலர்! - activist Silambam in jamapathi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 9:10 PM IST

Social Activist Petition In a Recovery Ponds: கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள எட்டு குளங்களை அரசு மீட்டு தூர் வார வேண்டும் என கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலரான கே.கோவிந்தவல்லப பந்த் சிலம்பம் ஆடி மனு அளித்தார்.

சிலம்பம் ஆடி மனு அளித்த சமூக ஆர்வலர்
சிலம்பம் ஆடி மனு அளித்த சமூக ஆர்வலர் (Image Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள எட்டு குளங்களை அரசு மீட்டு தூர் வாரிட வேண்டுமென கடந்த எட்டு ஆண்டுகளாக, சமூக ஆர்வலர் கே.கோவிந்தவல்லப பந்த் என்பவர் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்திகளில் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளார்.

சிலம்பம் ஆடி மனு அளித்த சமூக ஆர்வலர் கோவிந்தவல்லப பந்த் (Video Credits - ETV Bharat Tamilnadu)

மேலும், எட்டு ஆண்டுகளாக எட்டு குளங்களை மீட்க எண்ணற்ற அரசியல் கட்சி தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோரிடமும் அவர் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளார். பல கோரிக்கை மனு அளித்தும் ஆட்சியாளர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், இன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்விற்கு, இதுவரை அதிகாரிகளிடம் கோரிக்கையாக கொடுத்த பல மனுக்களின் நகல்களை மாலையாக அணிவித்து, அலுவலகம் முன்பு சிலம்பம் ஆடி மீண்டும் எட்டுக் குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க அவர் மனு அளித்தார்.

இதையும் படிங்க: அந்தியோதயா ரயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்த போலி டி.டி.இ. சிக்கியது எப்படி? - antyodaya super fast express

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.