ETV Bharat / state

நெல்லை அகஸ்தியர் அருவியில் கழிவுநீர் கலக்கிறதா? ஆட்சியருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு! - THAMIRABARANI RIVER ISSUE

தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவியில் கழிவுகள் கலப்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுபாட்டு வாரிய பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு
உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 10:22 AM IST

மதுரை: தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவியில் கழிவுகள் கலப்பது குறித்து களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி தூத்துக்குடி, முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில், "அகஸ்தியர் அருவி அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறை, மின்துறை குடியிருப்புகள் உள்ளது. அங்குள்ள கழிவுகள் அகஸ்தியர் அருவியில் கலக்கிறது. மேலும், சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே பக்தர்களால் வெளியேற்றப்படும் கழிவுகளும் அருவியில் கலக்கிறது," என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - ஆர்டிஐ வெளியிட்ட தகவல்!

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், தாமிரபரணி ஆறு, அகஸ்தியர் அருவி பகுதிகளில் ஆறு மாசடைந்துள்ளது. இதனால், ஆற்றுத் தண்ணீர் குடிநீருக்கு உகந்தது அல்ல என்று சோதனையில் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அகஸ்தியர் அருவி அருகே தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பது ஏன்? வனப்பகுதியில் இதுபோன்ற நிகழ்வு நடப்பதை எவ்வாறு அனுமதிக்கலாம்? எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இது குறித்து களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய பொறியாளர், தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவி பகுதியில் கழிவுகள் கலந்து நீர் மாசடைகிறதா? தடுப்பது எப்படி என்பது குறித்து ஆராய்ந்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.