ETV Bharat / state

தாய்லாந்து டூ சென்னை; விமானத்தில் கடத்தி வரப்பட்ட விலங்குகள்..வளைத்துப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்! - Smuggled animals from Thailand

Animal seizure in chennai airport: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட அரிய வகை மலைப் பாம்புகள், ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்களை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்தனர்.

கடத்தி கொண்டு வரப்பட்ட உயிரனங்கள்
கடத்தி கொண்டு வரப்பட்ட உயிரனங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 10:54 PM IST

சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான பயணிகளை நிறுத்தி அவர்களுடைய உடைமைகளையும் பரிசோதித்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை அடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

அதன் பின்னர், அந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில், பிளாஸ்டிக் கூடை ஒன்றுக்குள் 2 மலைப்பாம்புகள் மற்றும் மற்றொரு கூடையில் ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்கு ஒன்று இருந்ததையும் கண்டுபிடித்தனர். மேலும் சில வெளிநாட்டு அபூர்வ வகை ஆமைகள், ஆப்பிரிக்க நாட்டு அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் அபூர்வ வகை அணில் உள்ளிட்டவை இருந்தது கண்டறியப்பட்டன.

இதையடுத்து அந்த பயணியை தனி அறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், விரைந்து வந்த அதிகாரிகள் உயிரினங்களை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், ஒன்றிய வன உயிரின குற்ற பிரிவு அதிகாரிகள் அந்த பயணியை அழைத்துக்கொண்டு வடசென்னை பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். பின்னர், அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் மேலும் சில அபூர்வ வகை உயிரினங்கள் இருந்ததை கண்டறிந்து, அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அந்த பயணி கடத்தி கொண்டு வந்த இரண்டு அரிய வகை மலைப்பாம்புகள், ஒரு ஆப்பிரிக்க கருங்குரங்கு, 6 அரிய வகை ஆமைகள், ஆப்பிரிக்க அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை அணில் ஒன்று மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்கள் கைப்பற்றப்பட்டன .

மேலும், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படுபவை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கிணற்றுக்குள் விழுந்த தேசிய பறவையை இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.