ETV Bharat / state

விழுப்புரம் இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை! - villupuram double murder case

villupuram double murder case: விழுப்புரம் அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக நடந்த இரு தரப்பு மோதலில், அரசு பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20 பேருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம் இரட்டை கொலை வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 9:33 AM IST

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டை சேர்ந்தவர் குலசேகரன் (வயது 40). இவர்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அப்போதைய திமுக கிளை செயலாளரான நக்கீரன் (30) என்பவருக்கும் அரசு புறம்போக்கு இடத்தை ஆள்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இதில், சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தொடர்புடைய ஆதரவாளர்கள் செயல்பட்டுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் 4 தேதி, காலை 6 மணியளவில், இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. அப்போது, நக்கீரன் பிரிவினர் குலசேகரனை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இதனை தடுக்க வந்த குலசேகரனின் நண்பரான காத்தவராயன் (50) என்பவரையும் நக்கீரன் தரப்பினர் வெட்டி கொலை செய்துவிட்டு நக்கீரன் பிரிவினர் தலைமறைவாகியுள்ளனர்.

இது குறித்து, குலசேகரனின் சகோதரர் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேற்கண்ட புகாரின் அடிப்படையில், நக்கீரன், கோவிந்தராஜ்(வழக்கறிஞர்), சிவபூஷ்ணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கணடேயேன், சுதாகர், முரளி, கணகராஜ், மோகன் (காவலர்), சிவாநாதன், பிரபு, காளி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன்(பொதுப்பணித்துறை ஊழியர்), மாதவன், தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூணன், கண்ணன் ஆகிய 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போதே தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூணன், கண்ணன் ஆகிய 6 பேர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) நீதிபதி ராஜசிம்மவர்மன் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் உயிரிழந்த குற்றச்சாட்டுக்கு ஆளான 20 பேரும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ள காரணத்தால் அவர்களை குற்றவாளிகள் என அறிவித்தார்.

இருவரை கொலை செய்த வழக்கில், 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேற்கண்ட அபராத தொகையை கட்டத் தவறும் பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரையும் , திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்து கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் வக்கீலாக சுப்புராயலு ஆஜரானார்.

இதையும் படிங்க: உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது உயிரிழப்பா? தந்தை கூறுவது என்ன? - YOUTH DIED During Obesity Surgery

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.