ETV Bharat / state

பெயரில் மாற்றம் தேவை.. செயல்பாட்டில் எப்படி? புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வு பெற்ற காவல் ஆணையாளர் கூறுவது என்ன?! - three new criminal laws - THREE NEW CRIMINAL LAWS

New Criminal Laws: கடந்த ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டமானது எவ்வாறு மக்களுக்கு பயனளிக்கிறது, பழைய சட்டத்திற்கும் - புதிய சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஓய்வு பெற்ற காவல் ஆணையாளர் ராஜாராம் விளக்கிக் கூறுவதை இந்த சிறப்பு செய்தியில் பார்க்கலாம்.

காவல் ஆணையாளர் ராஜாராம் புகைப்படம்
காவல் ஆணையாளர் ராஜாராம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 6:32 PM IST

சென்னை: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சி சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஓய்வு பெற்ற காவல் ஆணையாளர் ராஜாராம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த மூன்று சட்டங்களும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, கடந்த ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையாளர் ராஜாராம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அதில், "கடந்த 1860ஆம் ஆண்டு லாடு மெக்காலே என்ற ஆங்கிலேயர் ஒருவர் ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், சிஆர்பிசி எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். அந்த காலத்தில் நம் நாட்டு மக்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தனர். அடிமைகளுக்கு தண்டனை கொடுக்கும் சட்டமாக இதை அப்போது கொண்டு வந்தனர்.

ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகியும், இந்த சட்டம் மாற்றப்படவில்லை தொடர்ந்து வந்தது. அந்த காலகட்டத்தில் ஆன்லைன் சைபர் குற்றங்கள் கிடையாது. போதைப் பொருள் குற்றங்கள் கிடையாது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் தண்டனைகளும் அதிகப்படுத்த வேண்டும்.

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு நாளில் தமிழ்நாட்டில் ஆயிரம் வழக்குகள் பதிவாகிறது என்றால், அதில் 700 வழக்குகள் ஆன்லைன் குற்றமாகத்தான் உள்ளது. ஆன்லைன் குற்றங்களை எப்படி விரைவாக கண்டுபிடிக்க வேண்டும், அவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வரவேண்டும். அதனால் தான் மத்திய அரசு பழைய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

புதிய குற்றவியல் சட்டத்தின் பெயரை திருத்தம் செய்க: புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தி, சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளதால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் சொல்வது கடினமாக உள்ளது. அதனை திருத்தம் செய்ய வேண்டும். இந்தியா என்பது பல மொழிகள் பேசுகின்ற ஒரு நாடு. பல மாநிலங்கள் உள்ள ஒரு நாடு. அப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு மொழியில் சட்டத்தின் பெயர்களை வைப்பதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. அதை நிச்சயமாக மத்திய அரசு மாற்ற வேண்டும்.

புதிய குற்றவியல் சட்டத்தில் மாற்றம்: அதேநேரம், சட்டங்களும் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் விசாரணையை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். அதேபோல், மருத்துவர் ஒரு வாரத்திற்குள் மருத்துவ அறிக்கை கொடுக்க வேண்டும். நீதிமன்றத்திலும் வாய்தாக்கள் அதிகம் கொடுக்காமல் இரண்டு வாய்தா தான் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் சொத்துக்குவிப்பு வழக்கு ஏறத்தாழ 17 ஆண்டுகள் நடைபெற்றது. அதேபோல், நிர்பயா வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டன. எனவே, காலம் தாழ்த்தி கொடுக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என கூறுவார்கள். எனவே, காலம் தாழ்த்தாமல் தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டனை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக எனக்கு தோன்றுகிறது.

நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்த பின் 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு சொல்லியாக வேண்டும் போன்ற பல்வேறு புதிய நடைமுறைகளை இந்த சட்டத்தில் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்படும் மக்களுக்கு புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் உடனடியாக நீதி கிடைக்கும் என்பது எனது கருத்து. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தின் மூலம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் போது வீடியோ பதிவுகள் செய்யப்பட வேண்டும்.

அதன் பிறகு சாட்சியங்கள் நீதிமன்றத்தில் மாற்றி கூறினால், இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து நீதிமன்றத்தில் காண்பிக்கலாம். இதனால் தவறு செய்தவர்களுக்கு நீதிமன்றத்தில் உடனடியாக தண்டனை கிடைக்கும். இதில், காவல்துறையினர் பணி குறையும். இதன் மூலம் குற்றங்களையும் உடனடியாக நிரூபிக்க முடியும்.

நான் காவல்துறையில் பணியாற்றிய பொழுது 30 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்தேன். அப்போது கடுமையாக கஷ்டப்பட்டு சாட்சியங்கள் கொடுத்து தண்டனை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் அது மிகவும் சுலபமாக செய்துவிட முடியும்.

ஏழை எளிய மக்களுக்கான சட்டம்: ஏழை, எளிய மக்களுக்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களை வைத்து வாதாட முடியாதவர்கள் காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பி இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டு காவல் நிலையம் வருபர்களுக்கு புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் எளிதாக நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்.

நாட்டில் சட்டங்களைக் கொண்டு வர பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் தான் நாடாளுமன்றத்தில் அந்த சட்டத்தை தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்.

சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான வழிமுறை: இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால் அதனை மத்திய அரசு மாற்றி அமைக்கலாம். இதில் பிரச்னைகள் இருந்தால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, அதனை மாற்றியமைக்கலாம்.

இல்லையென்றால், உச்ச நீதிமன்றத்தை அணுகி புதிய சட்டத்தில் உள்ள பிரச்னைகளை எடுத்துக்கூறி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெற்று அதனை மத்திய அரசு மாற்றி அமைக்கலாம். தற்போது தான் இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். நிச்சயமாக அதில் உள்ள பிரச்னைகளை பார்த்துவிட்டு மாற்றி அமைத்து விடலாம்.

மதுவிலக்கு சட்டம்: மதுவிலக்கு சட்டம் என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. அதை தற்போது தமிழ்நாடு மாநில அரசு மாற்றி அமைத்துள்ளது. தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் கடந்த 1937ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு திருத்தி புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

பழைய சட்டத்தில் தற்போது வரை ஒரே ஒரு பிரிவில் மட்டும் தான் குற்றவாளியை கைது செய்ய முடியும். அதாவது, கள்ளச்சாராயம் வைத்திருந்தாலோ, விற்றாலோ அல்லது கடத்தினாலோ மட்டும் தான் கைது செய்ய முடியும். மற்ற அனைத்து பிரிவுகளிலும் கள்ளச்சாராயத்தை காய்ச்சினாலோ, கடத்தினாலோ, விற்றாலோ அபராதம் விதிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படும் பிரிவாகத்தான் இருந்தது.

இந்நிலையில், கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதைத் தொடர்ந்து சட்டப்பிரிவை தமிழ்நாடு அரசு மாற்றி உள்ளது. அதில், இனிமேல் கள்ளச்சாராயத்தை காய்ச்சினாலோ, வைத்திருந்தாலோ, விற்றாலோ, கடத்தினாலோ நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதற்கு 1 - 5 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும். மேலும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என அந்த சட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சட்டத்தை தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளனர். ஆளுநர் ஒப்புதல் அளித்த உடன் அந்த சட்டத்தை விரைவாக அமல்படுத்துவார்கள். இதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என கூறினார்.

இதையும் படிங்க: "சமஸ்கிருதத்தை பாஜக நாடாளுமன்றத்தில் திணிக்கிறது" - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்! - THREE NEW CRIMINAL LAWS

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.