ETV Bharat / state

ஆவடியில் மீட்கப்பட்ட 1.8 கிலோ தங்க நகைகள்.. 507 செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு! - AVADI POLICE COMMISSIONE

பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 6 மாதத்தில் மீட்கப்பட்ட 1.8 கிலோ மதிப்பிலான தங்க நகைகள், 1.1 கிலோ வெள்ளி பொருட்கள், 507 செல்ஃபோன்கள் உள்ளிட்டவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்
ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் (Credit - avadipolice x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2024, 6:00 PM IST

சென்னை: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட 27 காவல் நிலைய எல்லையில் உள்ள மக்கள் நேரடியாக காவல் ஆணையரை சந்தித்து புகார் மனுக்களை அளிக்கும் குறைதீர் முகாம், போலிஸ் கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து அவற்றை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் விசாரித்துத் தீர்வு காணும்படி உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்தில் ஆணையரக எல்லையில் கொள்ளை, திருடு போன நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீட்கப்பட்ட தங்க நகைகள்
மீட்கப்பட்ட தங்க நகைகள் (Credit - avadipolice x page)

இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், மீட்கப்பட்ட 1.8 கிலோ தங்கம் ,1.1 கிலோ வெள்ளி மற்றும் 507 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் சைபர் கிரைம் மோசடி குற்றங்களில் 35 லட்சம் பணம் மீட்கப்பட்டு அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் , "ஆவடி காவல் ஆணையரகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து முறையில் உதவி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வங்கி வாடிக்கையாளர் பணம் ரூ.7.5 கோடி கையாடல்; மேனேஜர் எஸ்கேப் - 2 பேர் கைது!

இந்த வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் 208 பேருக்கு கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொலை அடிதடி திருட்டு மட்டுமின்றி நில அபகரிப்பு வழக்கில் 30 பேர், இணைய வழி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேர் என குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.