ETV Bharat / state

குடும்ப அட்டைதாரர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5000; புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு! - PUDUCHERRY CM ON FENGAL RELIEF FUND

புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 3:46 PM IST

புதுச்சேரி: கடந்த 4 நாட்களாக ஃப்பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தொடர் கனமழை பெய்து வந்தது. இதில் அதிகபட்ச மழையாக தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீ மழை பதிவாகி நிலையில் புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவாகியுள்ளது.

புதுச்சேரியில் இது வரை பெய்த மழைகளில் இதுவே அதிக அளவிலான மழைப் பொழிவாகும். இதற்கு முன், கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21சென்டிமீட்டர் மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “ ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை குறித்து பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இது வரை 551 நபர்கள் தங்க வைக்கப்பட்டு 85,000 உணவு பொட்டலகள் வழங்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக 12 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிக்காக 70 ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

4,000 ஊழியர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பேரிடர் மீட்பு குழு 55 பேர் கொண்ட 2 குழுக்களாக தீவிர மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அதில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 பேரை காணவில்லை. உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். நமது அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்"- கொல்லப்பட்ட செந்தில்குமார் மனைவி கோரிக்கை!

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 எக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஒரு எக்டேருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது. 4 மாடுகள் இறந்துள்ளன. ஒரு மாட்டுக்கு ரூ.40,000. 16 கிடாறி கன்றுகள் இறந்துள்ளன. கிடாறி கன்று ஒன்றுக்கு ரூ.20,000, 50 படகுகள் சேதமடைந்தன. படகு ஒன்றுக்கு ரூ.10,000, 15 கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணமாக வழங்கப்படும். உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

மழை நீரில் சேதமடைந்த வாகனங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இன்சூரன்ஸ் கம்பெனியுடன் பேசி வருகிறோம். நிவாரணத்திற்காக ரூ.210 கோடி செலவிட உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் காரணமாக பாகூர் பகுதிகள் சேதடைந்துள்ளன. வீடுர் அணை திறப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. நகரப்பகுதிகளில் 90 சதவிகித மின்சாரம் கொடுக்கப்பட்டு விட்டது.

ரூ.100 கோடி அளவில் மழை பாதிப்பு சேதம் உள்ளதாக முதல் கட்டமாக மத்திய அரசுக்கு தலைமை செயலர் கடிதம் எழுதியுள்ளார். ஆற்று கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் நீர் புகாமல் இருக்க கட்டுமான பணிகள் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறையுடன் ஆலோசித்து வருகிறோம். அறிவித்த நிவாரண தொகைகள் காலத்தோடு விரைந்து கொடுக்கப்படும்” என்றார்.

இந்த பேட்டியின் போது அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கள் ஆகியோர் உடனிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.