ETV Bharat / state

நெல்லையில் இளைஞர் நடுரோட்டில் சடலமாக மீட்பு.. காரணம் இதுவா? - nellai youth death

Nellai youth dies in front of temple: நெல்லையில் மானூர் அருகே 30 வயதான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பாலகிருஷ்ணன்,சடலம் தொடர்பான புகைப்படம்
உயிரிழந்த பாலகிருஷ்ணன் மற்றும் சடலம் தொடர்பான கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 3:09 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள களக்குடியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 30 வயதான இந்த இளைஞர் நேற்று இரவு களக்குடியில் இருந்து மடத்தூர் செல்லும் வழியில் உள்ள அலங்காரமுடையார் சாஸ்தா கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் அந்த கோயிலின் முன்பு மிகக் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்ததில், கடந்த சில ஆண்டுகளாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு பாலகிருஷ்ணன் தீவிரமாக பயிற்சி எடுத்து வந்ததாகவும், ஆனால் அவருக்கு எந்த வேலையும் கிடைக்காத காரணத்தால் கடும் மன விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரவுடிகளின் பட்டியலை கேட்ட சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்.. அலறப் போகும் ரவுடிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.