சென்னை: சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 39 வயதான நபர், அதே பகுதியில் ஒன்றை நடத்தி வருகிறார். 19 வயதான இவரது மகள் தந்தையின் கடையில் வேலை செய்து வந்தார். இதே கடையில் உறவினரின் மகன் கடந்த 2 வருடமாக தங்கி பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே 19 வயதான இளம்பெண்ணை அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக தெரிகிறது. அந்தப் புகைப்படத்தை காட்டி உறவினரின் மகன் மிரட்டி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் மும்பை சென்ற இளைஞர் செல்போன் செய்து இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். அத்துடன் பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு மும்பை வர வேண்டும் எனவும், அப்போதுதான் அரை நிர்வாண புகைப்படத்தை டெலிட் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பி வீட்டிலிருந்த நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி இளம்பெண் மும்பை சென்றார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே மகளை காணவில்லை என்பதால் பதறிப்போன பெற்றோர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீசார் விசாரணையை தொடங்கினர்.
பின்னர் ஜூன் 28ஆம் தேதி காணாமல் போன இளம்பெண் மும்பை குர்கவ் ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் தெரியவர, அவரது பெற்றோர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வீடு அழைத்து வந்தனர். வீட்டில் இருந்த பெண் அடுத்த நாளே தற்கொலைக்கு முயற்சிக்க, அதிர்ந்துபோன பெற்றோர் தங்கள் மகளிடம் நடந்தது குறித்து விசாரித்தனர்.
தனக்கு நடந்த கொடுமைகளையும், உறவினரின் மகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் அப்பெண் பெற்றோரிடம் கூறினார். இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் தெலங்கானாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தெலங்கானா விரைந்த மதுரவாயல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவலர் கண்ணன் உள்ளிட்ட தனிப்படையினர் இளைஞரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: துரத்திய கடன் தொல்லை.. திருப்பத்தூரில் தாய், மகள் தற்கொலை.. போலீஸ் கூறிய துயரமான தகவல்!