சென்னை: நாடாளுமன்ற தேர்தல் 2024க்கு பின் முதன்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்! பிரதமர் மோடி உறுதி!
சுமார் 2.05 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்த இந்த புதிய ரயில்வே பாலம் ரூ.535 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ராமேஸ்வரத்தை இணைப்பது இந்த ரயில் பாதை வழி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றும் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் இந்திய விமானப்படை சார்பில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் விமானப்படை சார்பில் ரபேல் , தேஜஸ், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களின் கண்காட்சி நடைபெற உள்ளது.