ETV Bharat / state

திருவாரூரில் மூளைச் சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்: கை கூப்பி நன்றி சொன்ன மருத்துவக் கல்லூரி முதல்வர் - Thiruvarur Government Hospital

Organ Donation: மூளைச் சாவடைந்த தனியார் நிதி நிறுவன மேலாளரின் உடல் உறுப்புகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. உடலுறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் கை கூப்பி நன்றி தெரிவித்தார்.

Organ Donation
திருவாரூரில் மூளைச் சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 3:27 PM IST

திருவாரூரில் மூளைச் சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்

திருவாரூர்: சின்ன மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் குணசேகரன்(44), இவர் திருவாரூரில் உள்ள எக்விடாஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்குச் சுதா என்ற நபருடன் திருமணமாகி, ஐந்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு குணசேகரன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென, அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையின் ரத்தம் உறைந்து மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த புதன்கிழமை மதியம் குணசேகரனை, அவரது குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், குணசேகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். அதன் அடிப்படையில், இன்று அதிகாலை முதல் 10 மருத்துவர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் குணசேகரின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அதில், இரண்டு சிறுநீரகங்களும் மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் தோல் ஆகியவை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. கண்கள் இரண்டும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து கொண்டுவரப்பட்ட குணசேகரனின் உடலைப் பார்த்து, அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். அந்த சம்பவம் பார்ப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து அவரது உடலுக்குத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குணசேகரன் குடும்பத்தினரைப் பார்த்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் கைகூப்பி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த குடும்பத்தினரைப் போன்று அனைவரும் உடலுறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதாவது மூளைச்சாவு, விபத்து உள்ளிட்டவற்றால் உயிரிழப்பவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதால், 4 நபர்கள் வரை பயன்பெறுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆகையால், இது குறித்த விழிப்புணர்வை அனைவரது மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதாவது, உடல் உறுப்புகள் தானம் செய்யும் நபர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு அனைவரது மத்தியில் பரவத்துவங்கி, அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரத் துவங்கினர். அப்படி தானம் செய்பவர்களுக்கு, முதலமைச்சர் அறிவித்தது போல அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மேயர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.