ETV Bharat / state

பொம்மைகள், பள்ளி புத்தகப்பையோடு அடக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் உடல்.. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க ஊர்வலம்! - புதுச்சேரி சிறுமியின் இறுதி ஊர்வலம்

Puducherry school girl murder: புதுச்சேரியில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.

கண்ணீர் கடலில் புதுச்சேரி சிறுமியின் இறுதி ஊர்வலம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 1:59 PM IST

Updated : Mar 7, 2024, 3:40 PM IST

புதுச்சேரி சிறுமி

புதுச்சேரி: கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி நான்கு நாட்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சடமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைபற்றி உடற்கூராய்வு மேற்கொண்டதில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, போக்சோ மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விவேகானந்தன்(57) மற்றும் கருணா (18) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பெயரில் மேலும் 5 பேரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்க புதுச்சேரி அரசு நேற்று (புதன்கிழமை) இரவு உத்தரவிட்டடது.

அதன் அடிப்படையில், 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்புடைய ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிறப்பு குழு, இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் 5 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிறுமி கொலை வழக்கில் நீதி கோரியும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். மேலும், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் என ஏராளமானவர்கள் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தங்களின் கண்டங்களைத் தெரிவித்தனர்.

சிறுமியின் இறுதி ஊர்வலம்: இன்று காலை சிறுமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது, போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டியும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் சிறுமியின் புத்தகங்கள், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பை, பொம்மைகள் எடுத்துச் செல்லப்பட்டு அவற்றையும் சேர்த்து அடக்கம் செய்தனர்.

ஆய்வாளர் பணியிடை மாற்றம்: முன்னதாக, சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டிஜிபியிடம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனசெல்வன் இந்த வழக்கில் அலட்சியமாக இருந்ததாக பணியிடை மாற்றம் செய்யப்படுவார் என்று தெரிவித்தார். மேலும், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அலட்சிய காட்டிய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை; தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்!

Last Updated : Mar 7, 2024, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.