ETV Bharat / state

நீலகிரியில் தொடரும் கனமழை.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு! - heavy rain in nilgiris - HEAVY RAIN IN NILGIRIS

heavy rain in nilgiris: நீலகிரியில் கனமழை காரணமாக இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரியில் பெய்த கனமழை
நீலகிரியில் பெய்த கனமழை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 5:38 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் வசித்துவரும் பொதுமக்கள், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சிக்கி பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, உதகை கோட்டத்திற்கு 0423- 2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262- 261295, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252 மற்றும் பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

எனவே, மாவட்ட நிர்வாகம் எவ்வித இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளுமாறு அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் எனவும், மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நீலகிரி: கொட்டும் கனமழை.. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.