ETV Bharat / state

வாணியம்பாடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை.. நடந்தது என்ன? - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு, அவரது கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி அருகே புதுமணப்பெண் தற்கொலை
வாணியம்பாடி அருகே புதுமணப்பெண் தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 11:37 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவருக்கு உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருடன், 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த அருண்குமார் தனது மனைவி தேன்மொழியுடன் சென்னையில் இருந்துள்ளார்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அருண்குமார் சில நாட்களுக்கு முன்பாக தேன்மொழியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பெற்றோர் வீட்டில் தங்கி வந்த தேன்மொழி நேற்று முன்தினம் (பிப்.4) தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேன்மொழியின் உறவினர்கள், அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேன்மொழி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தேன்மொழி நேற்று (பிப்.5) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் உலோக சிலைகள் பதுக்கல்.. முதலமைச்சர் குடும்பம் பற்றி அவதூறு கருத்து - சென்னை கிரைம் செய்திகள்!

அதன் பின்னர் அவரது உடல், உடற்கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே, தேன்மொழியின் மரணத்திற்கு அவரது கணவர் அருண்குமார் தான் காரணம் எனக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேன்மொழியின் உறவினர்கள் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, உடற்கூராய்விற்காக காலை கொண்டு வரப்பட்ட தேன்மொழியின் உடலை, மாலை வரையிலும் பரிசோதனை செய்யப்படாமல் இருந்ததாகவும், அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தேன்மொழியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேன்மொழியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, உடற்கூராய்வு விரைவு படுத்தப்பட்டுள்ளதாகவும், அருண்குமார் மீது உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேன்மொழியின் உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. திருமணமாகி 6 ஆறு மாதங்களே ஆன இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போக்சோ வழக்கில் சிறை கைதியின் தண்டனை ரத்து..! பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.