சென்னை: சென்னை அடுத்த பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவியையும் பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக மோடி பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பே பல திட்டங்களை அறிவித்து இருந்தார். இன்றைக்கும் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தற்போது வரை பொதுமக்களின் செயல்பாட்டில் உள்ளது. மத்திய அரசு கொடுக்கக்கூடிய அனைத்து திட்டங்களும் மாநில அரசு கொடுப்பது போல் பாவனையில் நடந்து கொண்டு வருகிறது. மாநில அரசு கொடுக்கக்கூடிய அனைத்து திட்டங்களும் மத்திய அரசு கொடுக்கக் கூடிய திட்டங்கள் தான்.
மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு இருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய திட்டங்களுக்கும் இனிமேல் அதற்கான நிதியை ஒதுக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஒரு ரூபாய் கூட வரவில்லை என சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
மத்திய போக்குவரத்துத் துறையை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்காக மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தான் மத்திய அரசு இந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தியது. மத்திய அரசு எந்த பாகுபாடும் இன்றி தமிழ்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் நிச்சயமாக தரும்.
இதையும் படிங்க: சைதாப்பேட்டை டூ திருப்பூர்: போலீஸ் கட்டத்தில் மகாவிஷ்ணு.. பரம்பொருள் அறக்கட்டளையில் நடப்பது என்ன? - mahavishnu government school issue
புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் மாநாடு நடத்த வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு அனுமதி தருவதற்கு காலதாமதம் மற்றும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக நடந்து கொண்டு சுதந்திரம் கொடுத்து அவர்களை அந்த மாநாட்டை நடத்த விட்டிருந்தால் இதுபோன்று பிரச்னைகள் வந்திருக்காது.
பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் பல்லாவரம் மண்டலத்தில் மாவட்டத் தலைவர் திரு வேதா சுப்ரமணியம் அவர்களுடன் உறுப்பினர் சேர்க்கை 2024 ஆய்வு செய்து உறுப்பினர் அட்டை வழங்கியபோது pic.twitter.com/BZxVRUzUuT
— Nainar Nagenthiran (@NainarBJP) September 12, 2024
தமிழ்நாட்டிலும் வெகு விரைவில் பாரதிய ஜனதா கட்சியும் நிச்சயம் வளர்ந்து நிற்கும். 2026 மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும். தற்போது திமுக ஆளுங்கட்சியாக செயல்பட்டு வருகிறது. திமுக அமைச்சர்கள் வாக்குக்கு பணம் கொடுக்கிறார்கள். எல்லா காலகட்டத்திலும் வாக்குக்கு பணம் வாங்கிவிட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
நாங்கள் பள்ளி படிப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு வகுப்பிலும் நீதி போதை (Moral Science) என்று ஒழுக்கத்தை பற்றி சொல்லித் தருவதற்கு ஒரு பாடம் இருந்தது.
அதுபோன்று ஒழுக்கத்தை பற்றி மகாவிஷ்ணு கூறியிருக்கிறார். அவர் பேசியிருந்த சில வார்த்தைகள் தவிர்த்திருக்க கூடியவை தான். தாய் - மகன் உறவை கொச்சைப்படுத்துவது போல் பேசியதை நிச்சயமாக தவிர்த்திருக்க வேண்டும். துறை ரீதியாகவும், மத ரீதியாகவும் பல விஷயங்களை பல பேர் பொதுவெளியில் பேசி வருகிறார்கள்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.