ETV Bharat / state

மறைந்த இந்திராகுமாரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி - EX MINISTER INDIRA KUMARI - EX MINISTER INDIRA KUMARI

MK Stalin Tribute to Ex-Minister Indira Kumari: உடல் நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவராகவும் இருந்த இந்திரகுமாரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

MK Stalin pay tribute to former minister Indira Kumari
மறைந்த இந்திராகுமாரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 1:38 PM IST

சென்னை: 1991-1996 வரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய இந்திரகுமாரி, 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுக இலக்கிய அணி தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், இவர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.

இந்த நிலையில், அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது, இந்திரகுமாரியின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் இன்று சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அவரது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'கழக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான இந்திரகுமாரி தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர்.

அவரது மறைவு கழகத்திற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். மேலும், இந்திரகுமாரியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் சிக்கிய ரூ.4 கோடி யாருடையது?... கோவர்தன் மகன் வாக்குமூலத்தால் திருப்பம்! - Rs 4 Crore Seized Issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.