ETV Bharat / state

"எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்! - Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin talk about NPE: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Credits - Udhayanidhi Stalin X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 10:50 AM IST

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (செப்.9) காலையில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, துறை சார்ந்த அதிகாரிகளிடம், தமிழக அரசின் திட்டங்களையும், அத்திட்டங்களை மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, "முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தினுடைய சிறப்புத் திட்ட செயலாக்க துறை மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தற்போது பல்வேறு அரசு அதிகாரிகளுடன் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினோம்.

கடந்த ஆண்டு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எந்த அளவு நடைபெற்றுள்ளன? எவ்வளவு பணிகள் முடிவுற்றன? எந்தெந்த பணிகளில் சுணக்கம் உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துள்ளோம். தற்போது அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஏற்கனவே பதிலளித்திருக்கிறார். திருப்பி திருப்பி அதையே கேட்டால் என்ன செய்வது? என்றார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக முதலமைச்சருக்கு வைத்த கோரிக்கை குறித்த கேள்விக்கு?, அதை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது குறித்து முதலமைச்சர் பதிலளித்து விட்டார். எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லையா? முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.