ETV Bharat / state

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு தனியாருக்கு விடப்படுவது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்! - Minister sivasankar - MINISTER SIVASANKAR

Minister Sivasankar: திருநெல்வேலியில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணி நியமனத்திற்கு தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்படுவது தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 9:45 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் ஒரு பிரிவான திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 3 மண்டலங்களில் ஓட்டுநர் 169 பேர், நடத்துநர் 260 பேர் என மொத்தம் 559 பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் நிரப்ப திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பானது போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே, மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு துறைகளில் அவுட் சோர்சிங் எனப்படும் தனியார் பணி நியமனங்களை அனுமதித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்க முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசு திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் தனியார் மூலம் ஆட்கள் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்காலத்தில் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கபட்டு விடுமோ? என்ற அச்சம் தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது. மேலும், இந்த டெண்டர் மூலம் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள இளைஞர்களின் ஆசை கனவாகி போகும் நிலை உருவாகியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்குக்கு தமிழக அரசு துணை போவது போல் அமைந்துவிடும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் சார்பில் தொலைபேசியில் பிரத்யேகமாக தொடர்பு கொண்டோம். அப்போது, நாம் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு அமைச்சர் அளித்துள்ளார். கேள்விகள் பின்வருமாறு;

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது அது உண்மைதானா? என்ற கேள்விக்கு, "ஆமாம், ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் (SETC) இதுபோன்று 685 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தோம். பின்னர் 685 பணியிடங்களுக்கு நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமடுத்தப்பட்டனர்.

அதன் பிறகு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 685 பேர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், சட்டப்பேரவை கூட்டம் முடிந்த உடன் திருநெல்வேலி மட்டுமல்லாமல் மீதமுள்ள 7 போக்குவரத்துக் கழகங்களிலும் பணி நியமன நடைமுறை தொடங்க இருக்கிறது. அதுவரைக்கும் ஓய்வு பெறுபவர்கள். இயக்கி வந்த பேருந்துகளை ஓட்ட ஆளில்லாததால், பேருந்து சேவை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தற்காலிக பணி நியமனம் செய்யப்படுகிறது. நிரந்தர பணி நியமனம் செய்யப்பட்ட பிறகு, தற்காலிக பணியாளர்கள் விடுவிக்கப்படுவார்கள்" என்றார்.

அப்படி என்றால் தற்போது தற்காலிகமாக தான் பணி நியமணம் செய்யப்படுகிறார்களா? என்ற கேள்விக்கு, "ஆமாம், தற்காலிகமாக தான். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. எப்பவும் செய்யக் கூடிய ஒன்று தான். இப்போது நாங்கள் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்" என்றார்.

ஆனால், இது போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சி என தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் அச்சப்படுகிறார்களே? என்ற கேள்விக்கு, "இது தற்காலிக நடைமுறைதான் என்பது தொழிற்சங்கங்களுக்கு நன்றாக தெரியும். ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்ததால் தான் பண்டிகை காலங்களில் போராட்டம் நடந்த போது பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்க முடிந்தது. அதனால் அரசுக்கு கூடுதல் வருவாயும் கிடைத்தது. தொழிலாளர்களுக்கும் இது நல்லது தான். அவர்களுக்கும் பணிச்சுமை குறையும். எனவே இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இல்லை" என்றார்.

அவுட் சோர்சிங் முறை வந்துவிடும் என்ற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதே? என்ற கேள்விக்கு, "அதுபோன்று இல்லை, நிரந்தர பணியாளர்கள் எடுக்காவிட்டால் தான் அதுபோன்று அச்சப்பட வேண்டும். எனவே இந்த அச்சம் தேவையற்றது".

அப்படி என்றால் உறுதியாக இந்த தனியார் பணி நியமனம் செய்யப்படுமா? எனக் கேட்டபோது, "நிச்சயமாக, அதேசமயம் சட்டமன்ற தொடர் முடிந்த பிறகு மூன்று மாதத்திற்குள் நிரந்தர பணியாளர்கள் நியமனம் நடைபெறும்".

திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் குறிப்பாக அதிக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறதே? "கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்கள் எடுக்காமல் விட்டுவிட்டனர். நாங்கள் தற்போது பணி நியமன நடைமுறையை தொடங்கியுள்ளோம். விரைவில் பிரச்சனை சரி செய்யப்படும்".

குறிப்பாக திருநெல்வேலியில் ஆட்கள் பற்றாக்குறையால் பல பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?, "அதற்காகத்தான் தற்போது இந்த தற்காலிக பணி நியமனம் செய்யப்பட இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி இடம் பெற வேண்டாம்: தமிழ்நாடு அரசுக்கு நீதியரசர் சந்துரு குழு பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.