ETV Bharat / state

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 18வது முறையாக நீட்டிப்பு..! - chennai news

Minister Senthil Balaji Case: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Minister Senthil Balaji Case
Minister Senthil Balaji Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 5:37 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜன. 31) முடிவடைகிறது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று (ஜன.31) விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார். அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாகச் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 18-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானின் மேல்முறையீடு மனுவிற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.