ETV Bharat / state

“செல்போன் மனித குலத்துக்கு எதிரானது" - அமைச்சர் மெய்யநாதன் கருத்து! - Minister Meyyanathan in book fair - MINISTER MEYYANATHAN IN BOOK FAIR

Pudukkottai Book fair Opens Today: புதுக்கோட்டை மாவட்டம் அரசு மன்னர் கலைக் கல்லூரி திடலில் இன்று முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 9:33 PM IST

புதுகோட்டை: புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7வது புத்தகத் திருவிழாவை இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடத்துகின்றனர். இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த புத்தகத் திருவிழா புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரி திடலில் நடைபெறும் நிலையில், அங்கு 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை கண்காட்சியில் வைத்துள்ளனர். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, “வாசிப்பை நேசி, வாசிப்பு உன்னை உயர்த்தும் என மறைந்த தலைவர் கருணாநிதி எப்போதும் புத்தகத்தோடு புத்தகமாக இருப்பார். வாசிப்பது மட்டும் முக்கியமல்ல, வாசித்ததை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும் அதுதான் முக்கியம்.

இந்த கால இளைஞர் சமுதாயம் மத்தியில், புத்தக வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டதால்தான் இந்த புத்தகத் திருவிழாவை அரசுத் துறையுடன் இணைந்து செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு வாசிப்பு இயக்கங்கள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இது கம்ப்யூட்டர் காலமாக இருந்தாலும் புத்தகம் படிப்பது அவசியமானது என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து விழாவில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், “செல்போன் மனித குலத்துக்கு எதிரானது என்பது எனது கருத்து. ஆனால் புத்தகங்கள் வாசிப்பது அப்படியல்ல. சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் இரண்டாவது மாநிலமாக இந்தியாவிலேயே தமிழகம் திகழ்கிறது. இந்த உலகம் போட்டி நிறைந்த உலகம்.

எனவே சமுதாயத்தில் உயர வேண்டும், அனைவரும் பாராட்ட வேண்டும் என்றால் நாம் நம்மை உயர்த்திக் கொள்வதற்கு நூல்கள் உதவுகிறது. இன்றைய சமுதாயத்தில் நாம் அனைவரும் அதிகமாக செல்போனை தான் பயன்படுத்துகின்றோம், இது மிகவும் ஆபத்தானது. நமது வாழ்க்கை மிக மிக உன்னதமானது.

இந்த வாழ்க்கையை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் கொண்டு செல்வதற்கு புத்தகங்கள் அதிகளவு உதவுகிறது. நம்முடைய அறிவை யாராலும் பறிக்க முடியாது. அனைவரும் வாசிக்க வேண்டும் என்பதற்காக தான் கருணாநிதி சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார். தற்போதைய முதலமைச்சர் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மாஞ்சோலை தொழிலாளிகளை விரட்டும் பிபிடிசிக்கு அரசு உதவி செய்கிறது" - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.