சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்கம் சார்பில் நூலகர்களுக்கான, நவீனத் தொழில்நுட்பப் பயிற்சி என்னும் பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “நூலகர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பம் வகையிலான பயிற்சி இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் வழங்கப்படவில்லை. வாசகர்களுக்கு தேவையான நூல்களை எளிதில் கிடைக்க செய்யும் வகையில் நூலகர்க்களை தயார்ப்படுத்தும் பயிற்சி இது.
நூலகத்தை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்கின்றனரா என்பதை நூலகர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் நூலகத்திற்கு வராத இளைஞர்களை நூலகத்திற்கு வரவைக்க வேண்டும். இந்த தொழில்நுட்ப பயிற்சிக்கு ஆண்டு ஒன்றுக்கு 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.
அறிவாயுதத்தை ஏந்திய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அறிவு ஆயுதங்களாக இருக்கும் நூல்களின் பாதுகாவலர்கள் நூலகர்களுக்காகப் புதிய திட்டம் ஒன்றை இன்று தொடங்கி வைத்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 6, 2024
2023-2024 மானியக் கோரிக்கையின் போது " ஆண்டுதோறும் ரூ.76 இலட்சம் மதிப்பீட்டில் @tnschoolsedu… pic.twitter.com/wdNo17mvn3
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில மகேஸ் பொய்யாமாெழி, “வெள்ளம் பாதித்த இடங்களில் ஜனவரி 2ஆம் முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு பொதுத் தேர்வு நடைபெறும். டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு அந்த மாவட்டங்களில் நிலைமை சீரானப் பின்னர், செயல்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஐஐஎம் போட்டியில் சாதித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்; இவர்களின் பிசினஸ் மாடல் என்ன?
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு நடத்திய சோதனை குறித்து துறை ரீதியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு உள்ளோம். மேலும் விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தி மொழி தெரிந்தால் தான் டெல்லியில் பிழைக்க முடியும். இந்தியாவில் 20 சதவீதம் பெயர்தான் ஆங்கிலம் மொழி தெரிந்தவர்களாக உள்ளனர் என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். முன்னதாக தாய் மொழி முக்கியம் என குரல் கொடுத்தவர் அவர். ஆனால் தற்போது இவ்வாறு பேசியிருப்பதை நம்ப முடியவில்லை. ஏன் இக்கருத்தை கூறினார் என்று தெரியவில்லை.
பிற மாநிலத்தவர்கள் மற்றும் இந்தி மொழி பேசுபவர்களுக்கு ஏராளமானவருக்கு தமிழ்நாடு அடைக்கலம் கொடுத்து வருகிறது. தமிழ் நாட்டில் இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றி வருகிறோம். ஆனால் உலகம் முழுவதும் அனைத்தும் இடங்களிலும் தமிழ் மக்கள் பரவி உள்ளனர். வெங்கையா நாயுடு அவர்களின் கருத்து ஆச்சரியப்படுத்துகிறது” என்றார்.