சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில், திமுக சார்பில் வேட்பாளர் செங்குட்டுவனும், அதிமுக சார்பில் வேட்பாளர் கே.அசோக் குமாரும் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அப்போது, 605 தபால் வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், தேர்தல் அதிகாரியில் உத்தரவை ரத்து செய்து நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்தப் பதிவாளரை நியமிக்க வேண்டும் என அந்த தொகுதி போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது, "உரிய காரணமின்றி அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யத் தேர்தல் வாக்குகளைத் தபால் வாக்குகளைச் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். நிராகரிப்பதற்கு முன் வேட்பாளர்களிடம் காரணங்களைத் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டே அதிமுக வேட்பாளர் வெற்றி பெறத் தேர்தல் அதிகாரி செயல்பட்டுள்ளார். தனக்கும் அதிமுக வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் 794 தான் என இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நடைபெற்றது. இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமாரின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, உயர்நீதிமன்ற பதிவாளர் தலைமையில், இரண்டு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிமுக- திமுக வேட்பாளர் முன்னிலையில் செல்லாது என நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் மீண்டும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மறு வாக்கு எண்ணிக்கையை 1 மாதத்தில் முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: 24 மணிநேரத்தில் மூவர் உயிரை வாங்கிய வெள்ளியங்கிரி மலை.. பக்தர்களுக்கு வனத்துறையின் அட்வைஸ் என்ன? - velliangiri hills death