ETV Bharat / state

மகளிர் சிறைகளில் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கு; தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் காவல்துறை கண்காணிப்பாளரை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு மற்றும் சிறைத்துறை டிஜிபி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 7:20 PM IST

சென்னை: வேலூர், கோவை, சேலம் மற்றும் மதுரையில் மகளிர் சிறப்பு சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சிறைகளுக்கு பெண் கண்காணிப்பாளர்களையே நியமிக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மகளிர் சிறைகளின் கண்காணிப்பாளர்களாக ஆண் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், பெண் கைதிகளால் தங்களது குறைகளை சொல்ல முடியாத நிலை இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீரென ஏற்பட்ட விரிசல்.. பரபரப்பான தலைமைச் செயலக அலுவலகம்.. அமைச்சர் நேரில் ஆய்வு!

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் சிறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு ப்ளீடர் எட்வின் பிராபகர், வேலூர் மகளிர் சிறையில் மட்டுமே ஆண் அதிகாரி இருப்பதாகவும், மற்ற சிறைகளில் பெண் கண்கானிப்பாளர்கள் பணியில் இருப்பதாகவும், வேலூர் சிறைக்கும் விரைவில் பெண் அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சிறைத்துறை டிஜிபி-க்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.