ETV Bharat / state

பிரச்சார வாகனத்தைச் சோதனை செய்ய முற்பட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடிகர் மன்சூர் அலிகான் வாக்குவாதம்! - lok sabha election 2024

Mansoor Ali Khan Argument With Election Officials: வேலூரில் பிரச்சார வாகனத்தைச் சோதனை செய்ய முற்பட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடிகரும், இந்தியப் புலிகள் ஜனநாயக கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 4:45 PM IST

Mansoor Ali Khan Argument With Election Officials

பிரச்சார வாகனத்தைச் சோதனை செய்ய முற்பட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடிகர் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் சுயேச்சை சின்னமான பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று(ஏப்.15) கே.வி.குப்பம் அடுத்த சேத்துவண்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மன்சூர் அலிகான் வந்த பிரச்சார வாகனத்தைத் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழு வழி மறித்து சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது மன்சூர் அலிகான், கள்ளக் கடத்தல் கடத்துபவர்கள் காரை நிறுத்துவது போல் நிறுத்துகிறீர்கள், வந்து இருப்பவர்கள் முறையான தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழு அதிகாரிகளா இல்லை போலியானவர்களா என்று பாருங்கள், என்னைச் சோதனை செய்வது போல திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தைச் சென்று சோதனை செய்யுங்கள் பார்க்கலாம் என்றும், வந்திருப்பவர்களைப் புகைப்படம் எடுங்கள் என்றும் தெரிவித்தார்.

உடனே தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் மன்சூர் அலிகான் பரப்புரை மேற்கொண்ட வாகனத்தைப் புகைப்படம் எடுத்து அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'மோடிக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் தெருக்கோடி தான்' - நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்..! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.