மதுரை: புனேவில் நடைபெற இருக்கும் அகில இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டிக்கான அணித் தேர்வு, நேற்று (பிப்.14) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி செலுத்துதல் துறையில் எழுத்தராகவும், உடற்கல்வி துறையின் ஆராய்ச்சி மாணவராகவும் பயின்று வரும் எம்.தீபன் ராஜ் கலந்து கொண்டுள்ளார்.
அதில், தமிழக ஆண்கள் வாலிபால் அணிக்காக அவர் தேர்வாகியுள்ளார். இப்போட்டிகள், இம்மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை புனேவில் உள்ள ஸ்ரீ சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழக வாலிபால் அணிக்காக விளையாடத் தேர்வாகியுள்ள தீபன் ராஜ், மதுரையில் சாம்பியன்ஸ் வாலிபால் அகாடமி என்ற பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அந்த அகாடமி மூலம், பல ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். இதில் பயிற்சி பெறும் மாணவிகள் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது; போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி!