ETV Bharat / state

'பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது' - சென்னை உயர் நீதிமன்றம்! - MDMK SYMBOL ISSUE

MDMK symbol issue: குறைந்தது இரண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடாத மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 3:53 PM IST

mdmk symbol issue
mdmk symbol issue

சென்னை: மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்ய்பபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்கை மார்ச் 7ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்தது.

இதையடுத்து, வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 28ஆம் தேதி கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று (மார்ச் 27) காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான அங்கீகாரத்தை மதிமுக இழந்து விட்டது. அதனால், தேர்தல் அதிகாரி அளிக்கும் பொது சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.

விதிகளின் படி சின்னம் கோரும் கட்சிகள், குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். பொதுச்சின்னம், அங்கீகரிக்கப்பட்ட சின்னம் என சின்னங்கள் வேட்பாளருக்கு ஒதுக்கப்படுகிறது. மதிமுக கடந்த 2010ஆம் ஆண்டு கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்ததால், பம்பரம் சின்னத்தை கேட்க உரிமை இல்லை.

அங்கீகாரம் பெற்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், அதே கட்சி அங்கீகாரம் இழந்த பின்னர், அதே சின்னத்தை கேட்க முடியாது. பொதுச்சின்னத்தில் தான் மதிமுக போட்டியிட முடியும்” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் விதிகிளின் படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்சி, தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே குறிப்பிட்ட சின்னத்தைப் பெற முடியும்.

அதனால், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. குறைவான வாக்குகள் பெற்றதால் கடந்த 2010 முதல் மதிமுக தேர்தல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சின்னத்தை கேட்க குறைந்தது இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் மதிமுக போட்டியிட வேண்டும். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் சின்னம் கேட்க உரிமை உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவதால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: "வனவாசம் சென்றவர் அப்படியே சென்றிருக்க வேண்டியதுதானே,," - டிடிவி தினகரனை விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன்! - Thanga Tamilselvan Vs TTV

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.