ETV Bharat / state

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - TN SCHOOL TEACHER APPOINTMENT CASE

பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 3:51 PM IST

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், 2 சதவீத இடங்களை தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மூலமும் நிரப்ப வேண்டும் என கடந்த 2007ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணையின்படி, 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என பரணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிங்க : இசை ஆசிரியை ஊதிய வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2014-2015 ஆம் ஆண்டு முதல் 2024-2025 ஆம் ஆண்டு வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளதாகவும், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்று வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறி பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.