ETV Bharat / state

சிறுபான்மை பள்ளிகள் வழக்கு; ஜூன் 25ஆம் தேதி வரை அவகாசம்! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டத்தில் இருந்து விலக்களிக்கக் கோரி, சிறுபான்மை பள்ளிகள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 5:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், கடந்த 2023 ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.

அதில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் துவங்க அரசின் அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், "தமிழ்நாடு அரசின் சட்டத்தில் இருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்களிப்பது குறித்து முடிவெடுக்க, அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில், விலக்களிக்கக் கோரி சிறுபான்மை பள்ளிகள் தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளது. அவற்றின் மீது சாதகமாக அரசு முடிவெடுத்தால், இந்த வழக்குகள் செல்லாதது ஆகிவிடும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சிறுபான்மை பள்ளிகளின் விண்ணப்பங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதை அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், அதுவரை இடைக்கால உத்தரவை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு - இடைத்தேர்தல் எப்போது? - Vikravandi Assembly Constituency

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.