ETV Bharat / state

கல்வராயன் பகுதி மக்களின் நிலை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிமன்றம் - KALLAKURICHI KALVARAYAN HILLS

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 12:57 PM IST

Kalvarayan Hills people development issue: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதி மக்களின் நிலை குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மிகவும் பின்தங்கியுள்ள கல்வராயன் பகுதி மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா? அந்த பகுதி மக்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாரிகள் ஆய்வு பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தலைமை செயலாளர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கல்வராயன் பகுதி தலைமை வனத்துறை அதிகாரியையும் வழக்கில் சேர்த்து தனியாக பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்ய ஏதுவாக வழக்கை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: "அரசின் கருணை வேண்டாம்; சட்டப்படியான நிவாரணமே தேவை" - மாஞ்சோலை விவகாரத்தில் கிருஷ்ணசாமி ஆதங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.